முத்தூட் கோல்டு பாயிண்ட் என்பது, விலையுயர்ந்த உலோகங்களில் இருந்து தயாரிக்கப்படும் புதுமையான தயாரிப்புகள், மற்றும் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற, முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் விலையுர்ந்த உலோகங்கள் பிரிவான முத்தூட் எக்சிம் (பி) லிமிடெட்டின் ஒரு அங்கமாகும். இந்தப் பிரிவானது, மலிவான விலையில், உயர்ந்த தரங்களைக் கொண்டிருக்கும் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அணுகும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. முத்தூட் கோல்டு பாய்ண்ட்டை தவிர, முத்தூட் எக்சிம்-இன் தனித்துவமான சேவைகளில் ஸ்வர்ணவர்ஷம், ஸ்வர்ணவர்ஷம் வைர நகைகள், ஸ்வேதவர்ஷம், மற்றும் நிறுவன பரிசளிப்புகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முத்தூட் எக்சிம் (பி) லிமிடெட் -இன் நிறுவன இணையத்தளத்துக்கு வருகை புரியவும்: www.muthootexim.com
முத்தூட் கோல்டு பாயிண்ட், இந்திய தங்க வணிகத்துக்காக இந்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள கண்ணோட்டத்தோடு இணங்கிப் போகின்ற வகையில் இருக்கின்ற, தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள, முதல் தேசிய-அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட துறைரீதியான பங்கேற்பாளராகும்.
நாங்கள், வெளிப்படையான மற்றும் திறன்மிக்க வகையில் தங்கத்தை விற்பனை செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம். பழைய தங்கத்தை விற்று, உடனடியாகப் பணத்தை பெறுவதில் பெறுகின்ற ஈடு இணையற்ற அனுபவமானது 100% நேர்மையாகவும், துல்லியமாகவும் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள், ஒரு பாதுகாப்பான, வெளிப்படையான, மற்றும் அறிவியல்பூர்வமாக பரிசோதிக்கப்பட்ட முறையில் தங்கத்தை விற்பனை செய்யும் வசதியைப் பெறுகின்றனர்.
மொபைல் முத்தூட் கோல்டு பாயிண்ட் – இந்தியாவின் முதல் மொபைல் தங்கம் வாங்கும் வேன், வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து தங்கத்தை வாங்குகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த எங்கள் குழுமத்தின் நன்மதிப்பைத் தொடரும் விதமாக, வாடிக்கையாளரின் தங்கத்துக்கான அதிகபட்ச மதிப்பை அவர் பெறுவதை உறுதி செய்வதற்காக, நாங்கள் அவருடைய வீட்டுக்கே எக்ஸ்.ஆர்.எஃப் மற்றும் அல்ட்ராசவுண்ட் கருவிகளை எடுத்துச் செல்கிறோம்.